ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்ட பேரணி.!
சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி படுகொலை செய்யப் பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடாத்தப்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணி களை முன்னெடுத்து நடாத்தியுள்ள னா்.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங் காவுக்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் வடக்கு, கிழ க்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் சுத ந்திர ஊடக இயக்கத்தின் பிரதி நிதிகள் கலந்து சிறப்பித்துள்ளனா்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பி னர்களான
சி.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாநகர மேயர் ரி.சரவணபவன் உட்பட மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பேரணியின் இறுதியில் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி கையொப்பங்களும் பெறப்பட்டன.