Breaking News

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் என்பதில் சந்தேகமில்லை – அசாத் சாலி.!

நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே வகிக்க வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணி யின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட் சியில் வாக்கு கேட்ட யாரும் எதிர்க் கட்சி தலைவராக முடியாது எனவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழு ம்பு – செட்டியார் தெருவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ் சிங் கள புத்தாண்டு நிகழ்வு நடைபெற்று ள்ளது. 

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அசாத் சாலி, முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்டதையடுத்து தேர் தல் முறை மாற்றப்பட்டதாக தெரிவித்த அசாத் சாலி, தற்போது கொழும்பு மாநகர சபையில் தெரிவானவர்களுக்கு ஆசனங்கள் இல்லையெனத் தெரிவி த்துள்ளாா். 

இந் நிகழ்வில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவரான எஸ்கே. கிருஷ்ணா, கொழும்பு மாநகர மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலனை வேனியன் என்று அறியப்படும் கங்கை வேனியன், தென்னிந்திய சின்னத்திரை நடிகர்களும் கலந்து சிறப்பித்துள்ளனா்.