Breaking News

சென்னை அணி வீரர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் பொறுப்பல்ல - வேல்முருகன் எச்சரிக்கை!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் கிளர்ந்தெழும் நிலையில், சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது நேரி ட்டால் நாங்கள் பொறுப்பல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றம் தீர்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா மல் இருக்கும் மத்திய அரசினை கண் டித்து கடந்த சில நாட்களுக்கு முன்ன தாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர், சுங்கச்சாவடிகளை அடித்து நொறுக்கி னர். மேலும், காவிரி மேலாண்மை விவகாரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெருநிறுவன முதலாளிகளால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள், மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை வேறு மாநில ங்களுக்கு மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். 

அதோடு அல்லாமல் மீறி போட்டி நடந்தால் மைதானத்தை முற்றுகையிட்டு கிரிக்கெட் வீரர்களை சிறை பிடிப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். நாளை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சீர்குலை க்கவே ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. 

ஐபிஎல் போட்டியை நிறுத்த ஸ்டேடியத்தை முற்றுகையிட திட்டமிட்டு ள்ளோம். நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால் ரசிகர்கள்போல் சென்று தொண்டர்கள் எதிர்ப்பர் என தெரிவித்துள்ளாா்.  

மேலும், சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது நேரி ட்டால் நாங்கள் பொறுப்பல்ல என எச்சரிக்கை விடுத்ததோடு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஊழல்களை வெளிப்படுத்த நேரிடும் எனத் தெரிவித்துள்ளாா்.