இறுதி சமரச முயற்சிக்கான ஆராய்வு இன்று - ஜனாதிபதி.!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நாளை நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பாக சமரசத்தை ஏற்படுத்தி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான இறுதிச் சந்திப்பொன்றை இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடாத்தவுள்ளாா்.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்
ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி நிதிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி யின் பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி யின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் இரண்டு தரப்பினரும் எவ்வாறு சமரசமான முறையில் இணக்கப்பாட்டிற்கு வர முடியும் என்பது குறித்து ஆராயப்படவிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்குமிடையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். முதலில் இக் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொட ர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான நிலைப்பாடுகளில் இருப்பதாகவும் தற்போது பிரேரணையின் வெற்றி தோல்வி நிலைமையானது 50 க்கு 50 என்ற நிலைமையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளாா்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று ஐக்கிய தேசி யக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றி பெறுமானால் அது தென்னிலங்கையில் இனவாதிகளுக்கு தீணி போடுவதாக அமையும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளாா்.
இச் சந்தர்ப்பத்தில் கருத்து வெ ளியிட்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குளை பெற்று நீங்கள் வெற்றி பெற்றீர்கள்.
அப்படி உங்களால் வெற்றி பெற முடியுமாயின் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியி னால் ஏன் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இல்லை. இல்லை. நான் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குளை பெற்று வெற்றியீட்டியதை நினை த்து பெருமையடைகிறேன். இதனை நான் உலகம் முழுவதும் கூறி வருகி ன்றேன்.
ஆனால் தென்னிலங்கையில் தற்போது இருக்கும் நிலைமை குறித்தே நான் இந்த இடத்தில் தெளிவுபடுத்தியதாக எனத் தெரிவித்தார். இதனையடுத்து கேள்வி எழுப்பிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன், நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் அக் கட்சி பிரதமருக்கு ஆதரவளித்தால் ஒரு நெருக்கடியும் இல்லைத் தானே எனக் கேட்டுள்ளாா்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது குறித்து நான் தற்போது சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்து வேன். (நேற்றிரவு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது) சுதந்திரக் கட்சியானது டிசம்பர் 31 ஆம் திகதியே தேசிய அரசாங்கத்தை விட்டு வில தீர்மானித்தது.
ஆனால் நான் தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடையும் வரை அரசா ங்கத்தில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டேன் என்றார்.
இதன்போது இவ் விட யம் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு என்ன செய்யலாம் என கலந்துரையாடலில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் கேட்டிருக்கின்றனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை காலை (இன்று காலை) சுதந்திரக் கட்சியினரையும் ஐக்கிய தேசிய முன்னணியினரையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளாா்.
அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இறுதி சமரச முயற்சி யாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான இச் சந்திப்பை நடத்துவோமென ஜனாதிபதி இதன்போது ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களிடம் இண க்கம் தெரிவித்துள்ளாா்.
இதேவேளை இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் முடியும் வரை எந்த விதமான கருத்துக்களையும் தெரிவி க்காமல் அமைதியாக இருந்திருக்கிறார். தொடர்ந்து இன்று காலை சந்தித்து இறுதியாக ஆராய்வதெனத் தீர்மானத்துடன் நிறைவெய்தியுள்ளது.