தேசிய அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு முடக்கப்படலாம் - கூட்டமைப்பு சந்தேகம்
ஸ்ரீலங்காவின் மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங் கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் முடக்கப்படலாமெனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தந்தை செல்வாவின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கை தமி ழரசு கட்சியின் அம்பாறை திருக் கோவில் 5ஆம் வட்டார நிர்வாகக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையா ற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இக் கருத்தை தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், தமிழர்கள் அனைவரும் இணைந்து போராடுவதன் மூலமே தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ளார்.