தமிழ் மக்களின் போராட்டத்திற்கு விக்கிரமபாகு கருணாரத்ன ஆதரவு வழங்குவதாக தெரிவிப்பு.!
சுயாட்சி அதிகாரமுடைய தமிழர் தாயகத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக் கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளாா்.
பெடரல் கட்சி என அழைக்கப்படும் தமிழரசுக் கட்சியின் ஸ்தாகத் தலை வரான தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் ப்பாணத்தில் நேற்றைய தினம் நடை பெற்ற நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இக் கருத்தை தெரிவித்துள்ளாா்.
தமிழ் மக்களின் உரிமைக்காக கடந்த நான்கு தசாப்தகாலமாக குரல் கொடுத்து வரும் இடதுசாரி தலைவர்களில் முக்கியஸ்தரான நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன எஸ்.ஜே.வி.செல்வநாயகம் என்ற தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை ஆற்றியதுடன் தமிழர் களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தந்தை செல்வா முன்னெடுத்த போராட்டங்கள் பொருந்துமெனத் தெரிவித்துள்ளாா்.
ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் உரிமைகளுக்காக போராடுவது. இந்த போரா ட்ட முறையைதான் தந்தை செல்வா குறிப்பிட்டிருந்தார்.
சிங்களத்தில் ஸ்ரீ அடையாளத்தை பொறித்த போது தமிழில் ஸ்ரீ அடையாளத்தை பொறித்துக் கொண்டு அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு வாகனத்தில் சென் றார்.
இது தான் எங்களது ஸ்ரீ என்று அவர் அடையாளப்படுத்தியுள்ளார். இந்த நட வடிக்கை ஆத்திரமூட்டும் செயல் என சிலர் குற்றம் சாட்டலாம்.
ஸ்ரீ சிங்களத் திலும் ஸ்ரீ தமிழிலும் ஸ்ரீ தான். இதற்காக ஆத்திமடைய வேண்டும்.
எதற்காக சிங்களத்தில் மாத்திரம் ஸ்ரீ வேண்டும் என்று கேட்டார்கள்.
சிங்கள ஆதிக்கத்தை பலவந்தமாக மற்றுமொரு இனத்தின் மீது திணிப்ப தற்காகவே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு ஒருபோதும் அனும திக்க முடியாது.
அதனால் தந்தை செல்வா ஆரம்பித்த போராட்ட வடிவங்கள் இன்றைக்கும் பொருந்துமெனத் தெரிவித்ததுடன் தமிழ் தேசமொன்றை கட்டியெழுப்புவதற் காக தமிழர் தாயகத்தில் தொடர்ந்து போராட வேண்டியுள்ளதாகவும் வலியு றுத்திய நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன இப் போராட்டத்தின் நியாயத்தன்மையும் வலியுறுத்தியதுடன், அதற்கு முழுமை யான ஆதரவையும் பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
தமிழ் மக்க ளின் பிரச்சனை இன்னமும் முடிவடையவில்லை.
தமிழர் தேசத்திற்கான போராட்டம் தொடர்ந்தும் இருந்து கொண்டுதான் இரு க்கின்றது. அரசியல் யாப்பின் ஊடாக சுயாட்சி அதிகாரமுடைய தமிழர் தேச த்தை அடைவதற்கான போராட்டத்தை உறுதியாக முன்னோக்கி பயணிக்க வேண்டும்.
அதற்காக நாம் தற்போதைய அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடு த்து வருகின்றோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றி மிகவும் மோசமான சிங்கள பௌத்த பேரினவாத அரசொன்றை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இம் முயற்சியை முற்போக்குவாதிகள் அனைவரும் இணைந்து தோற்கடி த்தோம். அதன்போது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை மறந்து ஒற்றுமையாக செயற்பட்டிருந்தனர்.
அதனால் எதிர்வரும் நாட்களிலும் நாம் முரண்பாடுகளை களைந்த தமிழ் மக் களின் உரிமைகளை வென்றெடுக்க இணைந்து போராட வேண்டும். அதற்கு நவ சம சமாஜக் கட்சி முழுமையான ஆதரவை நல்குமெனத் தெரிவித்துள் ளாா்.