Breaking News

கண்டி வன்முறை சம்பவம் – பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை தெல்தெனிய நீத வான் நீதிமன்றில் இன்று முன்னி லைப்படுத்திய போது எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள் ளது. 

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெ னிய பகுதிகளில் கடந்த மாதம் நடை பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்து மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட பலர் கைதாகியுள்ளனா். 

இந்த நிலையில், மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போதே அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

இவ் வன்முறைகளில் இருவர் கொல்லப்பட்டதுடன், 11 பேர் வரை காய மடைந்ததுடன், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான 46 வீடுகள் மற்றும் கடை கள், 4 மதஸ்தலங்கள், 11 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத் தக்கது.

இந் நிலையில், வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கடும்போக்கு பேரினவாதக் குழுவாக கருதப்படும் மஹசொஹன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க கடந்த மார்ச் மாதம் 08ஆம் திகதி கைதாகியுள்ளாா்.