சம்பந்தன் தாத்தாவுக்கு ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் வரைந்த தவிப்பு!
தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதா கரன் விடுவிக்கப்படலாம் என்ற ஏக்கத்துடன் அவரது பிள்ளைகள் காத்திருந்த நிலையில் அவரின் பிள்ளைகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
புத்தாண்டுக்கு முன்னர் தந்தை தம் முடன் இணைவார் என்று ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நம்பிக்கை யில் காத்திருந்தனா். தந்தையை விடு விக்கக்கோரி அவர்கள் மனு ஒன்றை யும் கையளித்திந்தனா்.
இந்த நிலையில் புதுவருடத்தில் தாயும் இல்லாது தந்தையும் இல்லாது புது வருடத்தை அனுபவிக்க முடியாத வர்களாக அநாதரவான நிலையில் உள்ளனா்.
இந்நிலையில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிா்க்கட்சி தலை வரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஜனாதி பதியுடன் இணைந்து தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடியுள்ளனா்.
இந்நிலையில் இவ் விடயத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது பிள்ளை களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலான உருக்க வரிகளை விவரி க்கையில்......

எங்கள் அப்பாவின் விடுதலை பற்றியும்
ஏதாவது கதைத்தீர்களா?
எங்கள் அம்மாவின் இழப்பினால்
நாம் இன்று யாருமற்றவர்களாய்
எங்கள் அப்பாவின் விடுதலையை
சித்திரைப் புத்தாண்டின் முன் விடுவிக்க
விரைவுபடுத்துவதாய்
நல்லாட்சியின் ஜனாதிபதி
மைத்திரித் தாத்தா
சொன்ன நாள் முதல்
எங்கள் அப்பா எங்களிடம் வரும்
அந்த நாளை
எண்ணி கை விரல் மடித்துக்
கணக்கிட்டுக் காத்திருந்தோம்
சித்திரை வந்தது புத்தாண்டும் வந்தது ஆனால்
எங்கள் அப்பா மட்டும் விடுதலையாகி
எங்கள் வீடு வரவில்லையே!
நாடெல்லாம் புத்தாண்டுக் கொண்டாட்டம்
எங்கள் வீட்டில்........ சொல்ல முடியவில்லை
சொன்னால்த்தான் தெரியவேண்டுமென்றும் இல்லை
ஜனாதிபதித் தாத்தா வீட்டில்
சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில்
பொங்கல் உண்டு மகிழ்ந்த எங்கள் தாத்தாவே
அந்த நேரத்தில் எங்கள் நினைவுகள்
உங்கள் மனங்களில் வந்தனவா?
எங்கள் நிலையறிந்து அன்று இரங்கிய
அந்த மனிதனிடம் எங்கள் நிலை பற்றியும்
நினைவுறுத்தி "இன்றைக்குச் சித்திரைப் புத்தாண்டு
தனது தந்தை ஆனந்தசுதாகரின் வரவுக்காய்
கிளிநொச்சியில் இரண்டு பிஞ்சுகள்
திறந்த விழி மூடாது வாடிய முகத்துடன்
காத்திருக்கின்றார்கள் இன்றுதான்
அந்தத் தந்தையின் விடுதலை நாள்
இன்றுதான் அந்தப் பிஞ்சுகள் தந்தையுடன்
சேரும் நாள் தாங்கள் மறந்துவிட்டீர்கள்
அதை நினைவுபடுத்துகின்றேன் விரையுங்கள்"
என்பதை வேலைப் பளு காரணமாக
மறந்துவிட்ட அந்த மனிதனுக்கு கூறி
நினைவுபடுத்தினீர்களா எங்கள் தாத்தாவே.....
-சிவேந்தன்-