தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறிக்கை விடுப்பு - அமைச்சா் தயாசிறி ஜயசேகர.!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை க்கு எதிராக வாக்களித்து பிரதமரை காப்பாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்தால் அது கூட்டமைப்புக்கே பாதகமாக அமையும்.
பிரதமர் ரணிலுடன் இணைந்து ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாது என்பதனை கூட்டமைப்பு புரிந்துகொள்ள வேண்டுமென சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர விவரித்துள்ளாா்.
பிரதமர் ரணிலுடன் இணைந்து ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாது என்பதனை கூட்டமைப்பு புரிந்துகொள்ள வேண்டுமென சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர விவரித்துள்ளாா்.
பிரதமரை காப்பாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்தால் நாங்கள் எதிர்க்கட்சியாகிவிடுவோம். எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் எதி ர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியையும் பெற்று நாம் எதிர்க்கட்சி பக்கம் சென்று விடுவோமெனத் தெரிவித்துள்ளாா்.
எனவே பிரதமரை பாதுகாக்க தமிழ்க் கூட்டமைப்பு முன்வராமல் எதிர்க்கட்சியாக நடந்துகொள்ளவேண்டும். கரு ஜயசூரிய அல்லது ரஞ்சித் மத்தும பண்டார போன்ற ஒருவரை பிரதமராக நியமித்து தேசிய அரசாங்கத்தை தொட ர்ந்து, விரைவில் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும்.
எனவே கூட்டமைப்பு இதனை புரிந்துகொண்டு எதிரவரும் நான்காம் திகதி முடிவெடுக்கும் என்று நம்புகின்றோம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் நான்காம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான முடிவை எடுக்கப்போகின்றது என்பது குறித்து அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையிலேயே சிறிலங்கா சுந்திரக் கட்சி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் சிறிலங்கா சுந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிடுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தனது வகிபாகத்தையும் அரசியல் கதாபாத்திரத்தையும் உரிய முறையில் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
குறிப்பாக மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் தமிழ்க் கூட்டமைப்பு தனது அரசியல் வகிபாகத்தை உரியமுறையில் முன்னெடுக்கவில்லை. இது தொடர்பில் நாங்கள் கூட கவலையடைகின்றோம்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவுள்ளது.
இவ் வாக்கெடுப்பின்போது பிரதமருக்கு எதிராக வாக்களிக்கவே சுதந்திரக் கட்சி தீா்மானம் எடுத்துள்ளது.
நாம் பிரதமரை எதிர்க்கும்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து பிரதமரை காப்பாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்தால் அது கூட்டமைப்புக்கே பாதகமாக அமையும் என்பதனை அக்கட்சி தெரிந்திட வேண்டும்.
அதாவது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து பிரதமரை காப்பாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்தால் நாங்கள் எதிர்க்கட்சியாகி விடுவோம். எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியையும் பெற்று நாம் எதிர்க்கட்சி பக்கம் சென்றுவிடுவோம்.
அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிமலான அரசாங்கத்துடன் இணைவதுடன் அவர்கள் அரசாங்கமே உருவாகும். ஆனால் இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்க் கூட்டமை ப்பும் இணைந்து அமைக்கும் அரசாங்கத்தினால் ஒருபோதும் தேசிய பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதனை கூட்டமைப்பு மறந்து விடக்கூடாது.
தென்னிலங்கை மக்கள் ஒருபோது ஏற்க மாட்டார்கள் ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்க் கூட்டமைப்பும் இணைந்து அமைக்கும் அரசாங்கத்தை தென்னிலங்கை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
இவர்களினால் தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கும் புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியாது. ஏற்கனவே ஏக்கிய, ஒருமித்த என்ற வசனங்களை போட்டு கடந்த தேர்தலில் பாடம் கற்பிக்கப்பட்டது.
அதனால் ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்க் கூட்டமைப்பும் இணைந்து அமைக்கும் அரசாங்க த்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியாது.
இது கூட்டமைப்புக்கு வடக்கிலும் பாதிப்பை ஏற்படுத்தும். கூட்டமைப்பினால் வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவையானதை சிறிதளவும் வழங்க முடியாமல் போய்விடும்.
சிங்கள பௌத்த மக்கள் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் கூட்டமைப்புக்கு எதிராகவே இருப்பார்கள்.
எனவே இந்த அனைத்து விடயங்களையும் மனதில் கொண்டு அரசியல் ரீதி யில் சிந்தித்து எதிர்வரும் நான்காம் திகதி தமிழ்க் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்க வேண்டும்.
இந்த இடத்தில் கூட்டமைப்பு ஒரு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருந்து செயற்படவேண்டியது அவசியமாகும்.
அதனால் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமருக்கு எதிராக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அடுத்து என்ன நடக்கும் என்பதனை கூறிவிட்டோம். முடிவு தமிழ்க் கூட்டமைப்பின் கைகளிலேயே உள்ளது என்பதனை வலியுறுத்துகின்றோம்.
இதேவேளை கரு.ஜயசூரிய அல்லது ரஞ்சித் மத்தும பண்டார போன்ற ஒருவரை பிரதமராக நியமித்து தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து, விரைவில் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும் என்பதனையும் கூட்டமைப்புக்கு கூற விரும்புகின்றோம் என்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.
அதன் பின் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்வரும் நான்காம் திகதி இந்த பிரேரணை குறித்து விவாதிக்கவும் வாக்கெடுப்பை நடத்தவும் தீர் மானிக்கப்பட்டது.
அத்துடன் வாக்கெடுப்பின்போது இலத்திரனியல் முறை வாக்கெடுப்பை தவிர்த்து பழைய முறையில் செயற்படுத்தவும் திட்டமிட்டு ள்ளது.
இதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துள்ளது. சுதந்தி ரக் கட்சியும் இதனை ஆதரிக்குமெனத் தற்போது தெளிவாகின்றது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் பிரதமரை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனா்.