பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருப்போருக்கு விடுதலை.!
தமிழ் அரசியல் கைதிகள் என்ற பதத்தை ஸ்ரீலங்கா அரச தலைவர் பயன்படு த்தாவிடினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிரு க்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்கு அவர் தங்களிடம் விருப்பம் வெளியிட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு தடையாக இருப்பதாக கூறும் காரணிகளை தங் களால் ஏற்றுக்கொள்ள முடியாதெ னத் தெரிவித்துள்ள சுமந்திரன் ஆனால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வதற்கான அனை த்து நடவடிக்கைகளையும் மேற் கொள்வதாகவும் உறுதிமொழி வழங்கியுள்ளாா்.
யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றைய தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கமுடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரி வித்துள்ளாா்.