அதிகூடிய ஆதரவுடன் சாவகச்சேரி பிரதேச சபை த.தே. கூட்டமைப்பின் வசமாகியுள்ளது !
31 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசன ங்களையும், ஈ.பி.டி.பி 4 ஆசனங்களையும் சிறிலங்கா சுதந்திர கட்சி 3 ஆசன ங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களையும் தமிழர் விடுதலை கூட் டணி 2 ஆசனங்களையும் சுயேட்சைக்குழு 1 ஆசனத்தையும் பெற்றுள்ளனர்.
தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடமாகாண உள் ளூராட்சி ஆணையளர் பற்றிக் நிரஞ் சன் தலைமையில் இன்று (05-04-2018) காலை நடைபெற்றுள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் க.வாமதேவன் பிரேரிக்கப்பட்டதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் க.சதீஸ்வரன் தவிசாளர் வேட்பாள ராக பிரேரிக்கப்பட்டார்.
பகிரங்கமாக நடைபெற்ற தவிசாளருக்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் பிரேரிக்கப்பட்ட க.வாமதேவன் 23 வாக்குகளை பெற்று தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் 6 வாக்குகளை பெற்றார்.
இதைத் தொட ர்ந்து இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவின்போது தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் செல்வரத்னம் மயூரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.