Breaking News

ஈழத்தமிழருக்காக பிரபல நகைச்சுவை நடிகா் கருணாஸ் !

பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழக சட்ட சபையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்து வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளாா். 

பெரும்பாண்மையான தென்னிந்திய பிரபலங்கள் யாழ்ப்பாணத்திற்கு நிக ழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் நிலையில் கருணாஸின் விஜய மானது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. 

தமிழகத்தில் ஈழச் சிறார்களின் கல்வி க்காக தனது சொந்த நிதியில் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனை அழைத்து திறந்து வைப்ப தற்காக முதலமைச்சருக்கு நேரில் வந்து அழைப்பு விடுக்கவே கருணாஸ் யாழ்ப்பாணம் விஜயமாகியிருந்தாா். 

அத்துடன் கிளிநொச்சியில் நடைபெறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கும் சென்று அவர்களையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வட்டார ங்கள் தெரிவித்துள்ளன.