தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து இழைக்கும் துரோகம்!
ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் இழைத்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறு திகளை நிறைவேற்றாது காலத்தை இழுத்தடித்துவரும் அரசாங்கம் தமி ழர் பிரதேசங்களில் திட்மிட்ட சிங்க ளக் குடியேற்றங்களையும் பெரும் எடுப்பில் முன்னெடுத்துள்ளதாக இல ங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கடுமையாக சாடி யுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை ஏழாம் திகதிக்கு மாற்றியது குறித்தும் இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டது.
ஸ்ரீல ங்காவின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் பௌத்த தலைமை பிக்குகளின் ஆலோசணைகளின் படியே செயற்படுவதாக வும் குற்றம் சாட்டிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், இதனா லேயே 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் வெசாக் பௌர்ணமி தினத்தை காரணம் காட்டி மே தினத்தை ஒத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை மூடி மறைக்கவே மே தினத்தை நடத்தவிடாது அரசாங்கம் இந்த சதியை அரங்கே ற்றியிருப்பதாகவும் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலீன் தெரிவித் துள்ளார்.