Breaking News

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீது குற்றம் சுமத்திய - ஜனாதிபதி.!

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்தும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததற்கு எதிர்ப்பை தெரிவித்து தொடர் போரா ட்டங்களில் ஈடுபட்டுள்ள போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீது ஸ்ரீல ங்கா அரச தலைவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாா்.

அதேவேளை வலிந்து காணாமல் ஆக் கப்பட்டவர்களுக்கும், அரசியல் கைதி களுக்கும் நீதி கோரியும், இராணுவம் உட்பட அரச படையினரால் பல வந்த மாக கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களின் காணிகளை விடு விக்கு மாறும் வலியுறுத்தி பிரித்தா னியத் தலைநகர் லண்டனில் ஆர்ப் பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை “விடுதலைப் புலிகள்” என கடும் ஆவே சத்துடன் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன முத்திரை குத்தியுள்ளாா். 


லண்டனில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலை வர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணித்திருந்த ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் கண் டனப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனா். 

அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை விடுதலைப் புலிகள் என பீ.பீ.சீ சிங்கள சேவைக்கு அளித்த செவ்வியில் ஸ்ரீலங்கா அரச தலைவர் குற்றம் சுமத்தியுள்ளாா்.

எனக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்து நான் மகிழ்ச்சியடை கின்றேன். அதேவேளை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள அவர்களின் கோரி க்கைகள் என்ன என்று பார்த்தால், அவர்கள் தங்களுக்கு இருக்கும் இறுதித் தீர்வு தமிழீழம் என்றே தெரிவித்து நிற்கின்றனா். 

இக் கோரிக்கை ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கும் தரப்புகளுடன் கதைக்கவும் நான் தயாரில்லை செவ்வியில் ஸ்ரீலங்கா அரச தலைவரின் குற்றச்சாட்டுக்களுக்கு கடும் கண்டனத்தை லண்டன் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தரப்புக்களில் ஒன்றான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த அதன் மனித உரிமைகள் அமைச்சர் பத்மநாபன் மணிவண்ணன் வெளியிட்டார். 

 தமிழ் மக்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாது இருக்கும் ஸ்ரீலங்கா அரச தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது தமிழீழ விடு தலைப் புலிகள் என்று முத்திரை குத்தி பிரச்சினைகளை மூடி மறைக்க முற் படுவதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார். 

இதேவேளை வடகிழக்கில் காணாமல் போனோரின் உறவினர்களும், அரசி யல் கைதிகளின் உறவினர்களும், நிலங்களை பறிகொடுத்தவர்களும் வீதி யோரங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய பீ.பீ.சி செய்தியாளர் இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் வினவினர். 

ஸ்ரீலங்காவின் சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. அரசி யல் கைதிகள் என்று எவரும் இல்லை. அதுமாத்திரமன்றி இரகசிய சிறை கூட ங்களும் நாட்டில் இல்லை. எனது அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் எந்தவொரு இரகசிய முகாம்களும் இல்லை. 

பொலிஸ நிலையங்களிலோ அல்லது இராணுவ முகாம்களிலோ ரகசிய முகாம்களும் இல்லை. அதேவேளை ரகசியமாக சட்டத்திற்கு முரணாக எவ ரையும் தடுத்து வைக்கவும் இல்லை. இதனை மிகத் தெளிவாகக் தெரிவித்திட விரும்புகின்றேன். 

யுத்த காலங்களில் பாதுகாப்புப் படையினர் தமது தேவைக்காக பயன்படுத்திய காணிகளில் 80 வீதமான காணிகளை நாம் விடுவித்துள்ளோம். இம்முறை சித்திரைப் புத்தாண்டுப் பரிசாக வலிகாமம் வடக்கில் 560 ஏக்கர் காணிகளை விடுவித்தோம். ஆனால் அவை குறித்து எவரும் கதைப்பதில்லை. 

ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கடந்த 28 ஆண்டுகளாக கையகப்படுத்தி வைத் திருந்த வலிகாமம் வடக்கில் 683 ஏக்கர் காணிகள் விடுக்கப்பட்ட போதிலும், குறித்த காணிகளுக்குள் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் படை முகாம் களை பேணி வருவதுடன் வீதிகளையும் மூடி வைத்துள்ளதாகவும் காணி உரி மையாளர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கவலை வெளியிட்டு வருகின்றனர். 

அதேவேளை தொடர்ச்சியாக தமது கோரிக்கைகளை முன்வைத்து வடக்கில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்களை :ஈழ கொள்கையை” வலியுறுத்தி வருபவர்கள் என்றும் வியாபாரிகள் என்றும் ஸ்ரீலங்கா அரச தலைவர் அடையாளப்படுத்தியுள்ளாா். 

இவர்கள் வியாபாரம் செய்கின்றனர். தொடர்ச்சியாக தமிழீழம் தொடர்பில் கதைத்துக்கொண்டு குழுவாக திரண்டு பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின் றனர். அவர்களுக்கு போராடுவதற்கு வேறு காரணங்கள் இல்லை. அதனால் தான் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை க்கும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் தங்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என முறையிட்டுக் கொண்டிருக்கின்றனா். 

அவர்களது பிரச்சனைகள் என்ன. நாட்டை பிரிப்பதுதானே?. அதற்கு அனுமதி இல்லை. அதற்கு எந்தவித்திலும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறானவர்க ளுடன் பேசுவதற்கும் நான் தயாரில்லை. தமிழீழம் குறித்து கதைப்பவர்க ளுடன் எந்தவித பேச்சுக்கும் இடமில்லை. 

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக சட்ட நிபுணர் சாலிய பெரேரா தலைமையில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் உறவினர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் காணாமல்போனோர் அலுவலகத்தை அமைத்திருந்த ஸ்ரீலங்கா அரச தலைவர், நாட்டில் காணாமல் போனோர் என்று எவரும் உயிருடன் இல்லையென அடித்துக் கூறியுள்ளார். 

யார் இப் போராட்டங்களை நடத்துகின்றனர். அரச சார்பற்ற அமைப்புக்களின் ஏற்பாட்டிலேயே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அங்கு போய் பாருங்கள் அதை. 80 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலை யில் காணிகளை விடுவிக்குமாறு கூச்சலிடுகின்றனர். 

இவை நகைப்பிற்குரியவை. காணாமல் போனோரை எடுத்துக்கொண்டால் காணாமல்போனோர் ஒருவரும் உயிருடன் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். காணாமல்போனோர கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வட க்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் போரா ட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களை நான் கொழும்பிலும் அதேபோல் வடக் கிலும் நேரில் சந்தித்தேன். 

 அப்போது அவர்களது பிள்ளைகளை எங்காவது தடுத்து வைத்திருந்தால், அந்த இடங்களை அடையாளப்படுத்துங்கள் அங்கு நேரில் சென்று பாருங்கள் அதற் கான வசதிகளை நான் செய்து தருகின்றேன் என்று அவர்களிடம் தெரிவித் துள்ளேன். 

அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்கள் அப்பாவி பொது மக்களை திசைத் திருப்பி மேற்கொள்ளும் நடவடிக்கைகளே இந்த போராட்டங்கள். ஸ்ரீலங்கா அரச தலைவரின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொட ர்பில் கடந்த 421 நாட்களாக வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுப ட்டுள்ள காணாமல் போனோரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காசிப்பிள்ளை ஜெயவனிதா என்ற தாயார் அதிர்ச்சியை வெளியிட்டார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன வெளியிட்டிருந்த துண்டுப் பிரசுரமொன்றில் காணாமல் ஆக்கப்பட்ட காசிப்பிள்ளை ஜெயவனிதாவின் மகளின் புகைப்படமொன்றையும் பயன் படுத்தியிருந்தார். 

இவ்வாறான நிலையில் காணாமல் போனோர் எவரும் உயிருடன் இல்லை என்று ஸ்ரீலங்கா அரச தலைவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜெயவனிதா இன்றிரவு போராட்டக் களத்தில் வைத்து ஐ.பி.சி தமிழுக்கு வழ ங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளாா். 

இதேவேளை நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றும் பீ.பீ.சி க்கு வழங்கிய செவ்வியில் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். 

எனினும் ஸ்ரீலங்காவின் மனி உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சட்டத் தரணிகளின் அறிக்கைகளை சுட்டிக்காட்டும் அமெரிக்க இராஜாங்கத் திணை க்களம், இறுதியாக வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில், ஸ்ரீலங்காவிலுள்ள சிறைச்சாலைகளில் 130 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் இருப்பதாக தெரிவாகியுள்ளது. 

அதேவேளை இவர்களை அரசியல் கைதிகளாக ஸ்ரீலங்கா அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து வருவதையும் அமெரிக்கா கோடிட்டு காட்டியுள்ளது.