Breaking News

இரா.சம்பந்தன், அனுரகுமார ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை- ரஞ்சித் சொய்ஷா

எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி யின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு எதிரான நம் பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஷா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொ ன்றில் கலந்து கொண்டு உரையாற் றும் போதே இவ்வாறு தெரிவித்துள் ளாா். அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமா்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரி வித்துள்ளார். 

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மிக விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமெனவும் ரஞ்சித் செய்ஷா மேலும் தெரிவித்துள்ளாா்.