அமைச்சரவைக் கூட்டத்தை பகிஸ்கரிக்க தீா்மானம் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!
ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தை பகிஸ்கரிக்க தீர்மானி த்துள்ளது.
இதற்கமைய 2015 ஆம் ஆண்டு ஜன வரி எட்டாம்திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து உருவாக் கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் அமை ச்சரவைக் கூட்டம் முதன்முறையாக இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இன்றி நடைபெறவுள்ளது.
இதற்கமைய 2015 ஆம் ஆண்டு ஜன வரி எட்டாம்திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து உருவாக் கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் அமை ச்சரவைக் கூட்டம் முதன்முறையாக இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இன்றி நடைபெறவுள்ளது.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனவும் கலந்துகொள்வாரா அல்லது பகிஸ்கரிப்பாரா என்பது குறி த்து தெளிவிலாமல் இருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏப்ரல் நான்காம் திகதி நாடாளுமன்றில் வாக்கெடுப்பிற்கு விடப் பட்ட போது அதற்கு ஆதரவாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமை யிலான சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உட்பட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸா நாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோர் தலைமை யிலான 23 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது ஒதுங்கியிருந்தனர்.
இந்த நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர சாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற அழுத்தங்கள் தீவிரமடைந்து ள்ள நிலையில் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.
உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7.30 க்கு ஆரம்பமான இந்தக் கூட்டம் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நம்பிக்கை யில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, சுசில் பிறேமஜயந்த, தயாசிறி ஜயசேகர அநுர பிரிதர்சன யாபா, லக்ஸ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் தலைமையிலான சுதந்திரக் கட்சி யினர் தேசிய அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டுமென வலியுறுத்தி யுள்ளாா்.
எனினும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோர் தலைமையிலான அணியினர் தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்காகவே ஜனவரி எட்டாம் திகதி மக்கள் ஆணை வழங்கியதாகவும் குறிப்பிட்டனர்.
நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த முன்னாள் ஜனா திபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி நீடிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி நீண்ட உரையை ஆற்றியுள்ளார்.
எவ்வாறாயினும் சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் நீடிப்பது தொடர் பிலோ அல்லது வெளியேறுவது தொடர்பிலோ கட்சியின் தலைவரான ஜனா திபதி எந்தக் கருத்தையும் தெரிவிக்காது மௌமாக இருந்ததாக சுதந்திரக் கட்சியின் தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ஏப்ரல் பத்தாம் திகதியான இன்றைய தினம் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தை பகிஸ்கரிப்பது என சுதந்திரக் கட்சி மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா இல் லையா என்பது குறித்து முடிவு எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அமை ச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.