இன்றும் நாளையும் சந்திக்கின்றது கூட்டமைப்பு.!
நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா அல்லது பிரதமரை காப்பாற்றுவதா என்பது குறித்து தீர்மானம் எடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் கூடி கலந்தாலோசி ப்பதாக ஆயத்தமாகியுள்ளது.
தமிழ் மக்களின் நிலைப்பாடு, நல்லிணக்கப் பயணம் என்பவற்றை கரு த்தில் கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு எதிரான கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள அல்லது தோற்கடிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாடு மிகவும் முக்கியமாக கருதப்படுகின்ற நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானம் எடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று மாலையிலும் நாளையும் நடைபெறவுள்ளது.
பிரதான இரண்டு கட்சிகளும் மஹிந்த அணியினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை எதிர்பார்த்து கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் இது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போது அவர் கூறியதாவது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறி த்து பலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
எனினும் பிரேரணையை ஆதரிப்பதா அல்லது பிரதமரை காப்பாற்றுவதா என்ற எந்த தீர்மானத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவில்லை. இது குறித்து நாளை (இன்று 2ஆம் திகதி) மாலை எமது பாரளுமன்ற குழு கூடி ஆராயவுள்ளது.
அதேபோல் நாளை மறுதினம் (நாளை 3ஆம் திகதி) யும் பிரேரணை குறித்து கூட்டமைப்பினராகிய நாம் கலந்துரையாடவுள்ளோம். எவ்வாறு இருப்பினும் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை கொண்டு காய் நகர்த்தல்களை எவரும் முன்னெடுக்கும் நோக்கத்தில் செயற்பட்டால் கூட்டமைப்பு யாரையும் ஆதரிக்கப்போவதில்லை.
எனினும் எமது தமிழ் மக்களின் நிலைப்பாடுகள், எமது மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் என்பவற்றை கருத்தில் கொண்டே நாம் எந்தத் தீர்மானமேனும் எடுக்க வேண்டும். இது வரையில் நாம் எவ் வித முடிவுகளையும் எடுக்கவில்லை. ஏனைய கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லையெனத் தெரிவித்துள்ளாா்.