Breaking News

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவிப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு ஒன்றை விடுத்துள்ள தாக தகவல்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்கா கவே இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள் ளதாக தெரியவந்துள்ளது. தற்போது ஊடக நிறுவனங்களின் தலைவர்களு டன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த் தையின் போது ஜனாதிபதி இத் தக வலை தெரிவித்துள்ளார். 

மேலும், இலங்கைத் தேர்தல் முறையில் குறைப்பாடுகள் ஏதும் இருக்குமா யின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற் கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளாா். 

விரைவிலேயே முழு அமைச்சரவை மாற்றமொன்று மேற்கொள்ளப்படவுள்ள தாக தெரிவித்த ஜனாதிபதி, குறித்த செயற்பாடுகளுக்காக இரு தரப்பு குழுவொ ன்றும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, சர்வதேச தொழி லாளர் தினம் கொண்டாடப்படவுள்ள மே மாதம் 7ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.