Breaking News

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஸ்ரீ.சு. கட்சி இன்று ஆராய்வு

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்களின் ஆணைக்கு முழு மையாக மதிப்பளித்து செயற்படுமென அக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றைய தினம் நடை பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சுசில் பிறேம ஜய ந்த வைபவத்தின் பின்னர் ஊடகங்க ளுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா். 

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றும் நோக்கில் முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்சவின் கூட்டு எதிரணியினால் நம்பிக்கையில்லாப் பிரேர ணையொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை புதன்கிழமை நான்காம் திகதி விவாத த்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அன்றைய தினமே வாக்கெடுப்பிற்கும் விடப்ப டவுள்ளது. இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் அக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் சுசில் பிறேமஜயந்த, சுதந்திரக் கட்சியினரான தாம் மக்களின் ஆணைக்கு துரோகம் இழைக்க மாட்டோம் என சூளுரைத்துள்ளார். 

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தற்போ தைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி யில் இருப்பதை மிகத் தெளிவாக கோடி காட்டியிருப்பதாகக் குறிப்பிட்ட அமை ச்சர், இதனால் அவர்களின் முடிவிற்கு செவி சாய்க்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். 

இதனாலேயே உள்ளு ராட்சி சபைத் தேர்தல்முடிந்தவுடன் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை விலகுமாறு வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் இந்த நிலைப்பாட்டில் சுதந்திரக் கட்சியின் பெரும்பா லான அமைச்சர்கள் உட்பட உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். 

இதற்கமைய நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது கட்சி என்ற அடிப்படையில் பொதுவான தீர்மானமொன்றை அடுத்து அதற் கமைய தாங்கள் செயற்படுவோமெனத் அமைச்சர் சுசில் குறிப்பிட்டார். 

இந் நிலையில் நாளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கூடி நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராய்ந்து தீர்மா னிக்க உள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளாா்.