காணாமல் போனோரின் உறவினர்களைச் சந்திப்பதாக - சாலிய பீரிஸ்
நாட்டில் நடைபெற்று முடிந்த போரினால் காணாமல் போனோர் தொடர்பான அலுவலத்தின் அதிகாரிகள் மே மாதம் முதல் காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கவுள்ளனர்.
இதனை அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமது அலுவலக அதிகாரிகள் மே மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காணாமல் போனோரின் உறவினர்களை சந்தி த்து அவர்களின் கருத்துக்களை ஏற்று க்கொள்வதாக சாலிய தெரிவித்து ள்ளார்.
இதன் அடிப்படையில் முதலாவது சந்திப்பு மன்னாரில் எதிர்வரும் மே 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பீரிஸ் தெரிவித்துள்ளார்.