மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டோா் விசேட அதிரடிப்படையினரால் கைது.!
சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுட்ட 18 பேரை மஸ்கெலிய விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற் குட்பட்ட மானெளி வனப்பகுதியிலே நேற்று (27.04.2018) மாலை மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிரு ந்த போது கைது செய்யப்பட்டுள் ளனர்.
வனப் பகுதிகளிலுள்ள மரங்கள் மற் றும் மூலிகை மர வகைகள் அழிக்கப்பட்டு நீண்ட காலமாக மானொளி வனப் பகுதியில் சட்டவிரோத மணிக்ககல் அகழ்வு நடைபெற்று வருவதாக கிடை க்கப்பெற்ற தகவலுக்கமைய மஸ்கெலியா விசேட அதிரடிப்படையினரால் குறித்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பலாங்கொடை மற்றும்பொகவந்தலா பிரதேசங்களை சேர் ந்த 18 சந்தேக நபர்களையும் பொகவந்தலா பொலிஸாரிடம் ஒப்டைக்கப்பட்டு ள்ளதாகவும். சந்தேக நபர்களை 28.04.2018. ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொகவந்தலா பொலிஸார் தெரி வித்துள்ளனா்.