திருத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பு நள்ளிரவு வெளியாகியது!
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ஏற்பட்ட பிழைகளை திருத்தியமைத்து மற்றுமொரு வர்த்த மானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வர்த்தமானி அறிவித் தல் நேற்று நள்ளிரவில் அரச அச்சகத் திணைக்களத்தினால் வெளியிடப்பட் டுள்ளது.
ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறு ப்பினர்களுக்கு ஓய்வு வழங்கும் முக மாகவும், நாடாளுமன்ற அமர்வை முடிவுறுத்தும் வகையிலும் ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 12ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
எனினும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் நாடாளுமன்றம் கூட்டப்படுகின்ற அமர்வின் திகதி குறிப்பிடப்படாதமை பாரிய தவறு என்று சுட்டிக் காட்டப்பட்ட தோடு அரசியல் களத்தில் பெரும் குழப்பத்திற்கும் வழியமைத்தது.
இதனைய டுத்து கடந்த 23ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மற்று மொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
அரசியலமைப்பின் 70ஆவது ஷரத்தின் 4இல் குறிப்பிடப்பட்டதுபோல அரசிய லமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மே மாதம் 8ஆம் திகதி பிற்பகல் 2.15க்கு நாடாளுமன்றம் கூடுமென வர்த்தமானியில் வெளியி டப்பட்டது.
எனினும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் பிரி வுகள் பிழையானவை என்று சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். இத னையடுத்து பிழைகள் திருத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது.