கிளிநொச்சியில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!
கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளாா். கிளிநொச்சி, பூநகரி நல்லூர் வீதியில் நேற்று (25.04.2018) மாலை 6.00 மணியளவில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மீது தென்னிலங்கையைச் சேர்ந்த அபிவிருத்தி லொத்தர் சபைக்குச் சொந்தமான கனரக வாகனம் ஒன்று மிக வேகமாக வந்து மோதியதில் அந்த வாகனத்தின் அடிப்பகுதியில் மோட்டார் சைக்கிளும் மோட்டார் சைக்கிளில் சென்றவரும் அகப்பட்டு கடுமையான காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர் யார் என இனங்காணப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசார ணைகளை பொலிசார் முன்னெடுத்து ள்ளனர். மேற்படி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரும் அபிவிரு த்தி லொத்தர் சபைக்குச் சொந்தமான கனரக வாகனமும் மிகவேகமாகச் சென்றதாக அவதானித்தவர்களால் தெரிவி க்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலுள்ள வீதிகளில் வாகனங்களை சாரதிகள் வீதி விதிமுறைகளை மீறி அதிக வேகத்தில் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது என்பதை மக்கள் தெரிவித்துள்ளனா்.