தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி கண்டு பிடிப்பாம் - கிளிநொச்சி உருத்திரபுரத்தில்.!
தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிக ளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரனின் பதுங்கு குழியொன்றை புல னாய்வுப் பிரிவினரால் கண்டு பிடித்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 அடி ஆழத்திற்கு அகழ்வு செய்ததன் மூலம் குறித்த பதுங்குகுழியை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து இப் பதுங்கு குழி முழு அளவில் அகழ்ந்து எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டு இப் பதுங்கு குழி நிர்மாணிக்கப்பட்டிருக்கலாமென வும் 2007 ஆம் ஆண்டு வரையில்
பிரபாகரன் இப் பதுங்கு குழியில் தங்கியிரு ந்திருக்க வேண்டுமெனவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனா்.
மேலும் குறித்த பதுங்கு குழியில் பாரியளவில் வானூர்திகளை தாக்கியழிக் கும் ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.