தினகரன் ஆதரவாளர் மீது அரிவாள் வெட்டு ; பின்னணியில் அமைச்சர்.!
ராமநாதபுரத்தில் டிடிவி தினகரனின் அணியின் மாவட்ட நிர்வாகி அடையா ளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சியின் 31வது வார்டின் முன்னாள் கவுன்சிலரும், டிடிவி அணியின் மாவட்ட வர்த்தக அணி செயலாளருமான தவமுனிய சாமி இன்று காலை சிதம்பரம் பிள்ளை வாய்க்கால் ஊருணி அரு கில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது அடையாளம் தெரியாத 4 நபர்களால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரத் தாக்குதலுக்கு இல க்காகியுள்ளாா்.
சம்பவம் நடைப்பெற்ற பொழுது அங்கிருந்த ஏனைய மக்கள் அவரைக் காப் பாற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத் துள்ளனா்.
இவ்வேளையில், கடந்த வாரத்தில் திருவாடனையில் நடந்த தினகரன் அணிப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டனை தரக்குறைவாக பேசியதாலே இவர் அமைச்சர் ஆதரவாளர்களால் வெட்டப்பட்டார் என்ற தகவல் வெளியான தால் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனிடையே வெட்டுப்பட்ட தவமுனியசாமியின் வாக்குமூலத்தினைக் கொண்டு குற்றவா ளிகளைத் தேடி வருகின்றது பி1 காவல் நிலையம்.