தமிழர்கள் கடத்தல் விடயத்தில் கடற்படை அதிகாரிக்கு பிடியாணைகள் பிறப்பிப்பு!
வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரது வழக்கு விசாரணையில் தலைமறைவாக உள்ள சந்தேக நபரான ஸ்ரீல ங்கா கடற்படையின் லெப்தினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரா ச்சியை கைது செய்வதற்காக மீண்டும் இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்ப ட்டுள்ளன.
கொழும்பு கோட்டை நீதிமன்ற நீத வான் லங்கா ஜயவர்தனவினால் குறி த்த சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை மற்றும் சர்வதேச பிடி யாணை என்பன இன்று வியாழக் கிழமை பிறப்பிக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவின் ஆட்சிகாலமான 2008,2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு கொட்டாஞ் சேனை மற்றும் தெஹிவளை பகுதிகளில் 5 மாணவர்கள் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் இன்று முன்னிலைப்படு த்தப்பட்டபோது எதிர்வரும் 12ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இவ் வழக்கு விசாரணையில் கலந்துகொண்ட சாட்சிகள் சார்பிலான சட்டத் தரணி அச்சலா செனவிரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
“11 மாண வர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டது. நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசா ரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், கடற்படையில் இருந்த ஆனந்த குருகேயிடம் கடந்த 3ஆம் திகதி வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அதன்படி சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்ற சந்தேக நபர் கடற்படையில் சேவையிலிருந்த காலத்தில் தப்பிச்சென்றமை தொடர்பாக விசாரணை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் கடற்படைக்கு அறிவிக்காமல் சேவையிலிருந்து விலகி தலைமறைவாகியதாக வாக்கு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புல னாய்வுப் பிரிவு மன்றிற்கு தெரிவித்தது. வழக்கு தொடர்பான மேலதிக விப ரங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளாா்.
மேலும் தலைமறைவாகியுள்ள சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு எதிராக மீண்டும் திறந்த பிடியாணை மற்றும் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அதேவேளை, இன்று மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு சந்தேக நப ரையும் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீத வான் உத்தரவிட்டார்” என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.