Breaking News

போராட்டக்களத்தில் தொண்டருக்கு திருமணம் செய்து வைத்த ஸ்டாலின்.! (காணொளி)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசுக்கு எதிர் ப்பு தெரிவித்தும் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு, ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட பல ரீதியிலான போராட்டங்களை முன் னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக தமிழகமே போர்க் கோலம் பூண்டுள்ளது. சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்ய ப்பட்டு மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புரசை வாக்கத்தில் உள்ள ஓர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்க வைக்கப்பட்டிருந்த போது, அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒரு வருக்கு ஸ்டாலின், திருமா உள்ளிட்டோர் திருமணம் செய்து வைத்தனர்.

போராட்டக்களத்தில் நடைபெற்ற இந்த திருமணம், அங்கிருந்த தொண்டர்க ளையும் - தலைவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.