Breaking News

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டம் விரைவில் - சம்பிக்க (காணொளி)

பயங்கரமான சட்டமாக கருதப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குப் பதிலா மிகவும் பலமான மற்றுமொரு சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எவ்வகையிலும் நீக்க ப்படாது என்று தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, இந்த சட்டத்தை நீக்குவதாக வெறும் வதந்திகளே பரவிவருவதாகவும், அதில் எந்தவித உண்மையும் இல்லையெனத் தெரிவித்துள்ளாா்.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான சட்டத்தை அமுல்படு த்துவதாக அரசாங்கம் சர்வதேச அரங்கிற்கு வாக்குறுதி அளித்திருந்த நிலை யில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கும், அதற்குப் பதிலான புதிய சட்டத்தி ற்கும் எதிராக தமிழ்த் தரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

பயங்கரவாத தடுப்புச் சட்டமானது தமிழ் மக்களுக்கு எதிரான மிகவும் பயங்கர மான சட்டமாக கருதப்படுகின்ற நிலையில், அந்தச் சட்டத்தை எவ்வகையி லும் நீக்கமுடியாது என்பதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.

இந் நிலையில் கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமய வின் தலைவரும், மெகா பொலிஸ் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரண வக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலான சட்டவரைபு சமர்பிக்கப்பட்டு ள்ளதாக தெரிவித்துள்ளாா்.

“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முன்னாள் ஜனாதி பதி அமரர் ஜே.ஆர். ஜயவர்தனவினால் 1978ஆம் ஆண்டில் கொண்டு வரப்ப ட்டது.

இச் சட்டம் ஸ்ரீலங்காவில் அமுல்படுத்த முன்னுதாரணமாக இருந்தது அய ர்லாந்தில் அப்போது ஏற்பட்டிருந்த பிரிவினைவாதப் போராட்டங்களே யாகும். அந்த யுகம் இப்போது இல்லை. நாட்டில் எதிர்காலத்தில் பழைய முறையில் பயங்கரவாதம் ஏற்படாது.

அதனால் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறான புதிய சட்டமொன்று கொண்டு வரப்படும். அதுதொடர்பான அடிப்படை வரைபு முன்வைக்கப்பட்டு ள்ளது.

இந்த நாட்டில் இதற்கு முன்னர் ஜே.வி.பி கலவரம் மற்றும் போர் இடம்பெற்றி ருந்ததோடு அவ்வகையான அனுபவங்கள் எமக்கு இருப்பதால் அதற்கு ஏற்றாற்போல புதிய சட்டமொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்களமும் எடுத்துக்கூறியிருக்கிறது.

அதுபோல, சைபர் பயங்கரவாதம் அல்லது இலத்திரனியல் போரை எதிர் கொள்வதற்குத் தேவையான விடயங்களை உள்ளடக்கிய சட்ட திட்ட ங்களை அரசாங்கம் வகுத்து வருகின்றது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்பதில் உள்ள அர்த்தம் எவ்வகையிலும் மாறுபடாது.

ஆனால் அயர்லாந்து நாட்டில் ஏற்படுத்தியவாறு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றியமைக்காமல் அதை விடவும் பலம்வாய்ந்த சட்டமொன்று கொண்டுவரப்படும்” என்றார்.

இதேவேளை கண்டி திகன, தெல்தெனிய உட்பட கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்களுக்குப் பின்னால் ஜாதிக ஹெல உறு மயவின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், அவரால் எழுதப்பட்ட புத்தகங்களுமே காரணம் என்று முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் அண்மையில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என்று இன்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மறுப்பு தெரி வித்தார். அல்குவைதா போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புக்க ளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களாயின் அவர்களே தனது புத்தகத்தை எதிர்ப்ப வர்களாகவும் இருப்பார்கள் என்று தெரிவித்த அமைச்சர், முன்னாள் ஜனாதி பதி மஹிந்த தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் உண்மை க்குப் புறம்பானவை எனத் தெரிவித்துள்ளாா். 

எதிர்வரும் 18 மாதகால ஆட்சிகாலத்தை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வ தற்கு நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பாரிய மறுசீரமைப்பு ஒன்று ஏற்படு த்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளாா்.

அரசாங்கத்திற்குள் மாற்றம் அவசியம் என்பதோடு ஐக்கிய தேசியக் கட்சி க்குள்ளும் மாற்றமொன்று தேவை என்பதை மக்களும் சுட்டிக்காட்டியிருப்ப தாகத் தெரிவித்த அவர், ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் உட்பட 45 அம்சங்கள் அடங்கிய யோசனை ஒன்றை தமது அரசாங்கத்திடம் சமர் ப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளாா்