Breaking News

அரசியல் நெருக்கடி நீடிப்பை ஏற்ற ஜனாதிபதி.! (காணொளி)

ஸ்ரீலங்காவில் நடந்துமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்ப ட்டுள்ள அரசியல் நெருக்கடி இன்னமும் தீர்க்கப்படாது நீடித்து வருவதாக ஸ்ரீல ங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.

கொழும்பை மையப்படுத்திய அரசி யலில் கடந்த சில நாட்களுக்கு முன் வீசிய சூறாவளி தொடர்ந்தும் வீசி வருவதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி இதனால் அரசியலில் உள்ள குப்பைகள் அம்பலத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். 

எனினும் எவ்வாறான சவால்கள் எழுந்தாலும் நாட்டினதும், மக்களினதும் இரு ப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை எடுத்து அவற்றை அமுல்ப டுத்த நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். 

நீண்ட காலமாக புனரமைக்கப்படாதுள்ள குளங்கள் மற்றும் குட்டைகளை புன ரமைக்கும் தேசிய செயற்திட்டத்தை நேற்றைய தினம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரது சொந்த ஏரான பொலன்னறுவையில் ஆரம்பி த்து வைத்தார். 

பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொட பகுதியிலுள்ள சந்தனக் குளத்தை புனரமைக்கும் பணிகளை ஸ்ரீலங்கா அரச தலைவர் ஆரம்பித்து வைத்தார். 

இத் திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலுள்ள 2400 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி விவசாயிகளின் பொருளாதாரத்தை மும்படுத்தும் நோக்கிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

இதேவேளை பொலன்னறுவை மாவடடத்தை கட்டியெழுப்பும் பொலன்ன றுவை எழுச்சித் திட்டத்தையும் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன ஆரம்பித்து வைத்துள்ளார். 

பொலன்னறுவை மெிதிரிகிரிய பகுதியிலுள்ள திவுலன்கடவல தர்மராஜ விகாரையிலுள்ள பிரிவென கல்லூரிக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இர ண்டு மாடிக் கட்டடத்தையும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி திறந்து வைத்தார். அதே வேளை பொலன்னறுவை மாவட்டத்தில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்க ளையும் நேற்றைய தினம் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்துள்ளார்.