Breaking News

ரணிலை சிக்கவைப்பதில் எதிர்கட்சிகள் ஒன்றிணைவு - சபாநாயகருக்கும் அழுத்தம்.!

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது காணப்படுகின்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை மீது விரைவில் விவா தத்தை நடத்துமாறு எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான அழுத்த ங்களைப் பிரயோகித்துள்ளன. 

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையி ல்லா தீர்மானத்தை கொண்டுவர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ச தலைமையிலான ஒன்றிணை ந்த எதிரணியினர் தொடர் முய ற்சிகளை எடுத்து வருகின்ற நிலையி லேயே விவாதத்தை நடத்துவ தற்கான அழுத்தம் கூட்டாகப் பிரயோ கிக்கப்பட்டுள்ளது. 

மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனையிலான மோசடிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தொடர்புபட்டிருப்பதாக குற்றச்சாட்டு வெளியான நிலை யில், இந்த மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த பெப்ரவரி மாதம் இந்த அறிக்கை மீதான விவாதம் நடத்தப்படவிருந்த நிலையில், குறித்த அறிக்கை சிங்கள மொழியில் மட்டுமே காணப்படுகிறது என்று சபையில் சுட்டிக்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் அறிக்கை சமா்ப்பிக்கும் வரை விவாதத்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் விவரித்தாா். 

இதனைத் தொடர்ந்து விசாரணை அறிக்கை மீதான விவாதம் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்ட இந் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை கூடிய நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற தேசிய சுதந்திர முன்னணி, சோஷலிச மக்கள் முன்னணி மற்றும் ஜே.பி.வி ஆகியன இந்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை விரைவுபடுத்தும்படி சபாநாயகரிடம் கோரிக்கைகளை முன்வைத்தன.

 இதன்போது கருத்து வெளியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச “மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணை ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நடத்தப்பட்டது.

இரண்டாம் நாள் விவாதத்திற்கு முன்னர் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பி னரது தெளிவுபடுத்தலின் அடிப்படையில் மூன்று மொழிகளிலும் இந்த அறி க்கை கிடைக்காததினால் மொழிபெயர்ப்பு கிடைக்கும்வரை விவாதத்தை ஒத்தி வைக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஒத்திவைக்கப்பட்டு ள்ளது. 

ஆனால் அந்த மூன்று மொழிகளிலும் அறிக்கையைப் பெற்று விவாதத்தை தொடர சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? என வினவினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “இது சம்பந்தமாக நேற்று கட்சித் தலை வர்கள் சந்திப்பிலும் பேச்சு நடத்தினோம். 

நேற்று மாலை கடிதமொன்று ஜனாதிபதி செயலகத்திடம் இருந்து எனக்கு கிடைத்தது. முற்றிலும் மொழி பெயர்ப்பு செய்வதற்கு இன்னும் ஒருமாதம் செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதால் அரச தகவல் திணைக்களத்தில் காணப்படுகிறது. 

எதிர்வரும் வெள்ளியன்று விவாதத்தை நடத்த நினைத்திருந்த போதிலும், அறிக்கை கிடைக்க தாமதமடைகிறது. சிங்கள மொழியில் மட்டுமே அறிக்கை காணப்படுகிறது” என்றார். எனினும் மூன்று மொழிகளிலும் அறிக்கை கிடை க்காத போதிலும் ஏற்கனவே ஆணைக்குழு ஆங்கில மொழியில் வழங்கிய அறிக்கை மீது விவாதிக்க முடியும் தானே என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சபாநாயகரிடம் வினவினார். 

ஒரே தினத்தில் விவாதத்தை நடத்திமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதில ளித்த சபாநாயகர், இருந்த போதிலும் விமல் வீரவன்சவின் விடயத்தை கட்சித் தலைவர்கள் சந்திப்பில் எடுத்துக்கூறுவதாகவும் உறுதியளித்தார். மொழி பெய ர்ப்பு செய்வது தொடர்பாக வேறு வழிகளை மேற்கொள்ள முடியும் என்று சுட்டி க்காட்டிய சோஷலிச மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறு ப்பினருமான வாசுதேவ நாணயக்கார, மொழிபெயர்ப்பாளர்களை சேர்த்துக் கொள்வது சிறந்த வழி எனவும் தெரிவித்துள்ளாா். 

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வழங்கப்படவுள்ள சூழ்நிலையில், மொழிபெயர்ப்பு பிரச்சினையை முன்வைத்து, பிணைமுறிகள் மோசடி விவாதத்தை காலத்தாமதம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளாா். 

இச் சந்தர்ப்பத்தில் சபையில் எழுந்த ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, பிறர் மீது உள்ள மோசடி தொடர்பில் முண்டியடித்து விவாதி க்கவும், தன்மீது உள்ள மோசடி தொடர்பிலான விவாதத்தை காலம்  தாழ்த்து வதும் நியாயமில்லையெனத் தெரிவித்துள்ளாா். 

ஜனாதிபதி செயலக மொழிபெயர்ப்பை மட்டும் எதிர்பார்க்காமல், நாடாளு மன்றத்திலுள்ள மொழிபெயர்ப்பு ஊழியர்களை ஈடுபடுத்தியாவது அறி க்கையை மும்மொழியிலும் பெயர்ந்து சபைக்கு சமர்பிக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும்படியும் சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளாா்.