சூடு பிடிக்கும் கூட்டத்தொடர் : இலங்கை நீதிக்காக போராடும்.!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களில் சர்வதேச நாடுகளின் பிரதி நிதிகள் கலந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காக போரா டவுள்ளனா்.
குறிப்பாக அமெரிக்கா கனடா பிரி ட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த உபகுழுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக எதி ர்பார்க்கப்படுகின்றது.
ஜெனிவாவில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் 14 உபக்குழுக்கூட்டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 12ஆம் திகதி பாரதி கலாசார அமைப்பினால் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஒரு உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. மனித உரிமைபேரவை வளாகத்தின் 23 ஆம் இலக்க அறையில் இந்த உபக்குழு க்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அதேபோன்று 13 ஆம்திகதி தமிழ் உலகம் என்ற அமைப்பினால் இலங்கை தொடர்பில் ஒரு உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. 7 ஆம் இலக்க அறை யில் நடத்தப்படவுள்ள இந்த உபக்குழுக்கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கல ந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
14 ஆம் திகதி புத்துருவாக்க சமூக திட்ட முன்னணி என்ற அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டம் 21ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ளது.
15 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஒரு சர்வதேச மனித உரிமை அமைப்பினால் இலங்கை விவகாரம் தொடர்பில் விசேட உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக இலங்கையில் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் விவகாரம் தொடர்பிலேயே இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு இலங்கை விவகாரம் தொடர்பில் உரையாற்றவுள்ளனர். 21 ஆம் இலக்க அறையில் இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஒரு உபகுழுக்கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
அக்கூட்டமும் 21ஆம் இலக்க அறையிலேயே நடத்தப்படவுள்ளது.
மேலும் மற்றுமொரு சர்வதேச அமைப்பினால் எதிர்வரும் 19 ஆம்திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இக்கூட்டமானது இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க பசுமை தாயகம் அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான உபக்குழுக்கூட்டம் 20 ஆம்திகதி 25 ஆம் இலக்க அறையில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் நிலைமாறுகால நீதி தொடர்பாக இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதே தினத்தன்று சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பினால் இலங்கை தொடர்பான ஒரு விசேட உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. 27 ஆம் இலக்க அறையில் இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அந்த வகையில் இந்த அனைத்து உபக்குழுக்கூட்டங்களிலும் இலங்கை தொட ர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளன. இவை உள்ளடங்களாக மொத்தமாக 14 உபகுழுக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த அனைத்துக் கூட்டங்களி லும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இலங்கையின் நீதிப்பொறி முறை குறித்து வலியுறுத்தவுள்ளனர்.
ஏற்கனவே கடந்த அமர்வில் உரையாற்றிய கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசாங்கம் பொதுநலவாய மற்றும் சர்வதேச விசாரணையாளர்கள் நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டுமெனத் தெரிவித்தாா்.
இதேவேளை இலங்கை விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் தென்னிலங்கை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு உப நிகழ்வுகளில் உரையாற்றவுள்ளதுடன் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ள னர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.க்கள், மாகாணசபை உறுப்பினர்களுடன் ஐந்துபேரைக் கொண்ட குழு ஜெனிவா நோக்கி செல்லவுள்ளது. அத்துடன் பாதி க்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் இம்முறை ஜெனிவா நோக்கி பயணிக்கவு ள்ளனர்.
குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளனா்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவும் இம்முறை ஜெனிவாவில் முகாமிட்டு பாதிக்க ப்பட்ட மக்களின் பிரச்சினை தொடர்பில் எடுத்துரைக்கவுள்ளனா்.
தென்னிலங்கையின் ""எலிய"" அமைப்பின் பிரதிநிதியான முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவும் ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பிர சாரம் நடாத்தவுள்ளாா்.
அதாவது இலங்கை அராங்கம் இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்ப தாகவும் செயிட் அல் ஹுசைன் கூறுகின்ற அனைத்தையும் அரசாங்கம் கேட்ப தாகவும் அவர் ஜெனிவாவில் எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளாா். சரத் வீரசேகர அடுத்தவாரம் ஜெனிவா பயணமாகவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.