Breaking News

சிரியாவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா முன்வர வேண்டும்!

சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டுப் போரை உடனடியாக நிறுத்தி, போரி னால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தலையிட வேண்டுமென ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி மைகள் ஆணையாளர் செயிட் ரா அட் அல் ஹசைனுக்கு முகவரியிடப்ப ட்டு, கொழும்பிலுள்ள ஐ.நா மனித உரிமை ஆலோசகர் அலுவலகத்தி னூடாக அனுப்பி வைக்கப்பட்ட மகஜ ரிலேயே இவ்வாறு கோரப்பட்டு ள்ளது. 

சிரியப் போரில் மாபெரும் மனிதப் படுகொலைகள் இடம்பெறுவதைக் கண்டி க்கும் வகையில் "வடக்கு தமிழ் இளைஞர்கள்" அமைப்பினால் முன்னெடுக்க ப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (03-03-2018) காலை முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது. 
இப் போராட்டத்தின் முடிவில் கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு உள்நாட்டுப் போர் ஒன்றினால் மிக மோசமாகப் பாதிக்க ப்பட்ட ஒரு இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையில், அதன் வலிகளையும், வேதனைகளையும் பட்டுணர்ந்தவர்களாகிய நாங்கள் இன்று, 03.03.2018 அன்று, முல்லைத்தீவு மாவட்டம், முள்ளி வாய்க்காலில் நடாத்தும் அடையாள கவன யீர்ப்புப் போராட்டத்தின் முடிவில் பின்வரும் விடயங்களைத் தங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். 

2009 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை உலகின் மிக மோசமான இனப்படுகொலை எமது மண்ணில் இதே இடத்தில் நடந்தேறியது. போரில் நேரடியாகப் பங்கெடுத்தவர்கள் - பங்கெடுக்காதோர் என்ற பேதம் எதுவுமின்றி சர்வதேச யுத்தவியல் சாசனங்களுக்கு முரணாக, ஆண்கள் - பெண்கள் - அப்பாவிக் குழந்தைகள் என பல லட்சக்கணக்கான பொது மக்கள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டுள்ளனா். 

அக் கொடிய போரினால் தமது வாழ்க்கையைப் பலர் பறி கொடுக்க நேர்ந்தது. போரிலே மடிந்தவர்கள் போக, எஞ்சியவர்களின் வாழ்க்கை சவால் நிறை ந்ததாகக் காணப்படுகிறது. 

போரின் போது காயமடைந்தவர்கள் உடல்களில் வடுவேந்தி நிற்க, அந்தக் கொடிய கணங்களின் சாட்சிகளாக இன்றும் மனங்களில் மாறாத வடுவோடு நடைப் பிணங்களாக எம்மில் பலர் வாழ்ந்து வருகின்றோம். கொடிய போரும் - அதன் பின்னரான தாக்கங்களும் எவ்வளவு பாரதூரமானவை என்பதை நாம் உணா்ந்துள்ளோம். 

எங்கள் துயரத்தை ஒத்ததாகவே, இப்போது சிரியாவிலும் மாபெரும் மனிதப் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். குறி ப்பாக பச்சிளங் குழந்தைகள் போரில் கொல்லப்படுவதையும், காயங்களுக்கு உட்படுத்தப்படுவதையும் நாங்கள் வன்மையாக எதிர்கின்றோம். 

 உலகின் எந்தப் பாகமாயினும் மனித உரிமை மீது அதீத அக்கறை கொண்ட ஒருவர் என்ற வகையில் போரின் போது அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள் - பெண்கள் பாதிப்புறாமையை உறுதிப்படுத்துமாறு தங்களிடம் விநயமாக வேண்டி நிற்கிறோம். 

உடனடியாகப் போர் நிறுத்தமொன்றினை ஏற்படுத்தி, போர் இடம்பெறும் பகுதிகளினுள் சிக்குண்டுள்ள அப்பாவிப் பொது மக்களைப் பாதுகாப்பாக வெளி யேற்றுவதற்கும், அகதிகளாக - நிர்கதியாக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை ஆவன செய்யுமாறும், சர்வதேச குற்றங்கள் சம்பந்தமாக உறுப்பு நாடுகள் உலகளாவிய நியாயாதிக்கத்தையும் பிரயோ கிக்க வேண்டுமென வேண்டிக்கொள்கின்றோம்.