பழிவாங்கலை தவிர எதையும் செய்யவில்லை - மஹிந்த.!
ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களிற்குள் அரசியல் பழிவாங்கலைத் தவிர, நாட்டிற்கு நன்மை ஏற்ப டுத்துகின்ற செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளாா்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான கடமை ஸ்ரீல ங்கா பொதுஜன முன்னணி மீது காண ப்படுவதாகவும் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் கீழ் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட மேலும் சில உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் எடு த்துள்ளனா்.
கொழும்பு விஜேராமயவிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
இதன்படி வத்தளை மற்றும் மஹரகம பிரதேச, நகர சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு முன்பாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதோடு அவரிடம் இருந்து ஆலோசனை களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச “இன்று நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. மக்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு ஓர் எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. குறுகிய காலத்திற்குள் நல்லாட்சி அரசாங்கம் கடந்த 3 வருடங்களில் அரசியல் வழிவாங்கலைத் தவிர மக்களுக்கு நன்மையான ஒன்றையும் செய்யவில்லை.
பிரதேசங்க ளுக்கோ, மாகாணங்களுக்கோ கிராமங்களுக்கோ நன்மையான செயற்பாடு களை அரசாங்கம் செய்யவில்லை.
எனவே புதிதாக சபைகளுக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மிகக் கவன மாக செயற்பட வேண்டியது அவசியம். அதேபோல எதிரணியினர் மீது எல்லா நேரங்களிலும் பொலிஸ் நிதிமோசடி பிரிவு உள்ளிட்டவர்கள் கண்ணோட்ட மாக இருப்பதாலும் மேலும் கவனமாக சிந்தித்து செயற்படுவது அவசியமா கும்.
வெற்றிபெற்றோம், உறுப்பினராகிவிட்டோம் என்று நினைத்துவிட்டு கட்சி யின் கூட்டங்களுக்கு அழைத்தால் வராமல் இருந்துவிடாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளாா்.