Breaking News

முன்னாள் போராளிகளின் நட்டஈடு விடயத்தில் கைவிரித்தார் - சுவாமிநாதன் (காணொளி)

போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரான பொருளாதார உட்பட பல வகையி லும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற நஷ்ட ஈட்டுத் தொகையை முன்னாள் போராளிகளுக்கும் வழங்குமாறு ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை முன்வைத்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கான நஷ்ட ஈடு வழங்குவதற்காக 2016ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பத்தி ரத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிராகரி த்திருப்பதால் தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று மீள்குடியே ற்ற மற்றும் சிறைச்சாலை மறுசீர மைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பதிலளித்துள்ளாா்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிய ளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவா னந்தா, முன்னாள் போராளிகள் முகங்கொடுத்து வருகின்ற பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளில் இருந்து மீண்டெழுவதற்கு போரில் பாதி க்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நட்ட ஈட்டைப் போன்று அவர்களுக்கும் நட்ட ஈடு வழங்க அரசாங்கம் முன்வர வேண்டுமென சபையில் நிபந்தனையை முன்வைத்துள்ளாா்.