''அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" - கே. சிவாஜிலிங்கம்.!
முஸ்லிம் இனத்திற்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இன வன்முறைகள் எதிர்காலத்தில் வட கிழக்கு தமிழ் மக்கள் மீதும் மேற்கொள்ள ப்படலாம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழ் மக்கள் பிரதி நிதிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.
தேர்தல்கள் இடம்பெறும்போது யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியி லும் போட்டியிடலாம். எக் கட்சிக்கும் ஆதரவளிக்கலாம். ஆனால் எமது இனத்திற்கொரு பிரச்சினை எனும் போது அனைத்து கட்சிகளும் ஒன்றி ணைந்து செயற்பட முன்வர வேண்டும்.
அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பாரதி ஜெயராஜ் கூறிய கருத்து வரவேற்க கூடியதென வட மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அகில இலங்கை கம்பன் கலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கம்பன் விழா 2018 இன்று கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.