புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படுமா? மாவை சேனாதிராஜா.!
நாட்டின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணி கள் முடங்கி விடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்ட மைப்பு தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகளுக்கு எதிரான இன வாதக் கருத்துக்களை முன்வைத்த ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பாரிய வெற்றியை ஈட்டியதுடன் தற்போதைய தேசிய அரசியலிலும் தாக்கத்தை செலுத்தி வருகின்றது. இந்த நிலையிலேயே தங்களுக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட உள்ளு ராட்சி சபைகளுக்கான போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதி நிதிகளுடனான கல ந்துரையாடலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையகமான அறிவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மாவை சேனாதி ராஜா இவ்வாறு விவரித்துள்ளாா்.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் காணாமல் போனோர் அலுவலகத்திற்கான ஆணையாளர்களை கடந்த வாரம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்திருந்தார்.
சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் மற்றுமொரு முயற்சியா கவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த நியமனங்கள் வழங்க ப்பட்டுள்ளதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனா்.
எனினும் அரசாங்கத்தின் இந் நடவடிக்கை ஒரு முன்னேற்றகரமாக செயலாக தாம் பார்ப்பதாகத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான மாவை சேனாதிராஜா எனினும் மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கான நட வடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.