கிளிநொச்சியில் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி திரண்ட மக்கள்!
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்திய கருணை மனு ஒன்று கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலை யில் தடு த்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்க ப்பட்ட அரசியல் கைதியான சச்சிதா னந்தம் ஆனந்தசுதாகரனின் விடுத லையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவுக்கு கருணை மனுக்களை அனுப்பு வதற்கான செயற்றிட்டம் கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த சுதாகரனின் விடுதலையை கருணை மனுக்கள் அனுப்புவதன் மூலம் சீக்கிரப்படுத்த முடியும் என்ற சட்ட வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில், தமிழ் இளைஞர் சமூகத்தினால் வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்க ளிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்திட்ட கருணை மனுக்கள் இன்று (26.03.2018) காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பிரு ந்தாகரனிடம் அரசியல் கைதியின் பிள்ளைகள் சமா்ப்பித்துள்ளனா்.