வடமாகாண ஆளுநரின் இடமாற்றத்தினை ரத்துச்செய்யுமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினுடைய இடமாற்றத்தினை இரத்துச்செய்ய கோரி யாழ் நண்பர்கள் அமைப்பினால் அவசர கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில்....
மாகாணசபை முறைமை கொண்டு வரப்பட்டதில் இருந்து கடந்த கால அரசுகள் பொருத்தமான ஆளுநரை வடகிழக்குக்கு நியமிக்கவில்லை.
அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் அர சின் பிரதி நிதிகளாக இருந்தார்களே தவிர தமிழ் மக்களின் மனங்களை வெல்லவில்லை.
இது சிங்கள இனவாதிகளுக்கும் தமிழ் அரசியல் வாதிகளுக்கும் கிடைத்த வெற்றி.
ஆனால் இன மத மொழி பேதமற்ற முற்போக்கு வாதியான வடக்கு ஆளுநர் தங்களது ஆட்சிக்காலத்தில் நியமனமாகியுள்ளாா்.
தமிழ் மக்களுக்காக சிறந்த சேவையாற்றிய நிர்வாகி அவர்., அவரை இடமாற் றம் செய்தால் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தி ஏற்படும்.
பிற்போக்கு வாத அர சியில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற ஆளுநருடைய இடமாற்றத்தில் நேரடியாக தலையிடுமாறு கோரப்பட்டுள்ளது.
மேற்குறித்த கடிதத்தை யாழ் மாவட்ட அரச அதிபர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதுடன் இன்று யாழ் வரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரவுடன் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாட இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.