கண்டி வன்முறை; பொலிஸார் மீது பைசர் முஸ்தபா குற்றச்சாட்டு! (காணொளி)
கண்டி திகன, தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு சட்டம், ஒழுங்குகளை சரிவர செயற்படுத்தாமையே காரணம் என பொலிஸார் மீது பர பரப்பான குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது.
கண்டியில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணம் சட்டத்தை முறையாக அமு ல்படுத்தாமையே தவிர இனங்களு க்கு இடையிலான பிரச்சினையல்ல என்பதை ஜெனீவாவில் தெளிவுப டுத்தியதாக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைச்சரு மான பைசர் முஸ்தபா தெரிவித்து ள்ளாா்.
கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பிரதேசத்தில் பெரும்பான்மையித்தைச் சேர்ந்த ஒருவரை முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று படுகொலை செய்த தைத் தொடர்ந்து கடந்த 5ஆம் திகதி திகன, கட்டுகஸ்தோட்டை, அக்குறனை மற்றும் பூஜாப்பிட்டிய பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.
இதன்போது வீடுகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 46 வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டதோடு 4 மதஸ்தலங்களும் சேதப்படுத்தப்ப ட்டன.
கலவரத்தின்போது இருவர் உயிரிழந்ததுடன் 11 பேர்வரை காயமடை ந்துள்ளனா்.
இந்த நிலையில் ஜெனீவாவுக்கு சென்றிருந்த உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, கண்டியில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் கேள்வி களை அடுக்கிய சர்வதேச நாடுகளுக்கு முன்பாக தெளிவுபடுத்தலை முன்னெ டுத்துள்ளாா்.
இந்த நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபா, கொழும்பில் இன்று வியாழக்கிழமை பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் தெளிவுபடுத்தலை மேற்கொண்டார்.
“நாங்கள் அந்த இடத்தில் சட்டத்தை கடு மையாக அமுல்படுத்தியிருந்தோம்.
அதேபோல இவ் விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக சர்வ தேசத்திடம் வாக்குறுதியளித்திருக்கின்றோம். இந்த பிரச்சினையானது முஸ் லிம் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையல்ல. நாட்டின் சட்டத்தை அமுல்படுத்து வதிலிருந்த குறைபாடாகும்.
அன்றும், இன்றும் கூறுகிறேன் அன்றைய தினத்தில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தியிருந்தால் உயிரிழப்புக்களும், சொத்துச் சேதங்களும் ஏற்பட்டி ருக்காது.
அன்று பொலிஸாரின் கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோன்று இவற்றுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக கடும் நடவடி க்கை எடுப்பதாகவும் ஜெனீவாவில் நாங்கள் உறுதியளித்தோம். மேலும் சட்ட த்தை அமுல்படுத்துதலில் குறைபாடு இருக்குமானால் அதனையும் ஆராய் ந்து நிவர்த்தி செய்வதாகவும் அரசாங்கம் என்ற வகையில் வாக்குறுதியளி க்கப்பட்டுள்ளது.
இப் பிரச்சினையை முஸ்லிம் பிரச்சினை என்று சிலர் கூறியதால் கவலை யடைந்தேன்.
இது முஸ்லிம் பிரச்சினையல்ல, இலங்கையர்களது பிரச்சினை. இப் பிரச்சினை குறித்து ஜெனீவாவில் பல நாடுகள் கேள்வி கேட்டன. எனினும் அங்குள்ள தூதுவர்கள், பிரநிதிகளை சந்தித்தபோது இது இனங்களுக்கு இடை யிலான பிரச்சினையல்ல, சட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்த பிரச்சினை என்பதை தெளிவுபடுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளாா்.