பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - தெரிவாகியது திகதி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிர்க்கட்சியினால் சபாநாயகர் கருஜயசூரியவிடம் பாராளுமன்றில் நேற்று கையளிக்கப்பட்டது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி விவாதம் நடத்த தீர்மானி க்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கருஜய சூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடந்த கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்க ப்பட்டுள்ளது.