அன்னை பூபதியின் போராட்டத்தின் முதல் நாள் அனுஸ்டிப்பு!
ஈழப் போராட்டத்தின் இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 வரையான ஒரு மாதகாலம் உண்ணாவிரத போராட்டத்திலிருந்து உயிர் நீத்த அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு மாதம் நேற்றையதினம் (20-03-2018) ஆரம்பமாகியுள்ளது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (19-03-2018) சிரமதா னப்பணிகள் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்ப ட்டு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக தேசத்தின் வேர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது.