கண்டியில் தற்போதைய நிலைமை என்ன ? தீயில் கருகி இளைஞர் பலி.!
கண்டியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து தற்போது நிலைமை வழமைக்குத் திரும்புவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் பரவியு ள்ளன. இதேவேளை, வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கு ஏற்பட்ட தீயில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள தால் சன நடமாட்டம் குறிப்பிட்டள வில் இருப்பதாகவும் பாதுகாப்பு பல ப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள தால் சன நடமாட்டம் குறிப்பிட்டள வில் இருப்பதாகவும் பாதுகாப்பு பல ப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
நேற்று நண்பகலில் இருந்து மெது வாக ஆரம்பித்த வன்முறைச் சம்பவங்கள் மாலையாகும் போது பலத்த வன்முறையாக மாறியதாகவும் பின்னர் அங்கு பெய்த கடும் மழையையடுத்த ஓரளவு தணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றிரவு சிறு சிறு கல்வீச்சுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதா கவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு ச்சட்டம் இன்று காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களும் 100 க்கும் மேற்பட்ட கடைகளும் உடைக்க ப்பட்டுள்ளன.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற பகுதியை அமைச்சர்கள் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனா்.