இனவாதத்தை தூண்டுவதில் பலர் முயற்சி - மனோ
இனங்களுக்கு இடையிலான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடு த்தாலும், பலர் இனவாத கருத்துக்களை, பரப்பி வருவதாக தேசிய சக வாழ்வு அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளாா்.
இனங்களுக்கிடையிலான தெளிவி ன்மையே, கடந்த காலங்களில் ஏற்ப ட்ட வன்முறைகளுக்கு காரணமாக அமைந்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
கொழு ம்பு – பம்பலப்பிட்டி இந்துக் கல்லூ ரிக்கு கணனிகள் வழங்கும் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் கருத்து வெளியிட்ட தேசிய சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசன்,
வன்முறை சம்பவங்களில் ஈடுபடுப வர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளாா்.