கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பாராளுமன்றக்குழு முடிவெடுக்கும் - சம்பந்தன்.!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாக இருந்தால் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு மற்றும் தீர்மானம் என்னவென எமது பாராளுமன்றக்குழு கூடி ஒருமித்த தீர்மானம் ஒன்றை முன்னெடுக்கும்.
இது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூட்டமைப்பின் பாரா ளுமன்றக்குழு கூடவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்
சமூகசேவையாளரும் பிரபல வாத்தகருமான அமரர் கந்தையா துரைராசாவின் புத்திரர் அமரர் விஜயகுமார் (மயூரன்) ஆகியோரின் ஞாபகார்த்தமாக உப்புவெளியில் அமைக்கப்படவுள்ள முதியோர் இல்லத்துக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்றைய தினம் நடைபெற்றது.
இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய வினாவுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவிக்கையில்;.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வருவது வராதது பாரளுமன்றின் நடைமுறையில் சாதாரண விடயமாகும். பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது என வதந்திகள் வருகிறதே தவிர அது இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.
இதற்கு கூட்டு எதிரணியினரும் சில அதிருப்தியாளர்களும் முயற்சிக்கிறார்களென அறியமுடிகிறது.
அவ்வாறு கொண்டுவரப்படுமானால் தமிழ் தேசியக்கூட்டமைப்பினராகிய நாம் என்ன முடிவு எடுக்கவேண்டுமென்பதை பாராளுமனற குழு கூடியே ஒரு கூட்டுத்தீர்மானம் மேற்கொள்வோம்.
நம்பிக்கையில்லாத்தீர்மானம்
தொடர்பில் நாம் என்ன தீர்மானம் எடுக்கவேண்டுமென்பதை எமது பாராளு மன்ற குழு கூடி முடிவுகளை மேற்கொள்ளும்.
எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளு மன்றில் கூடும்படி அழைப்பு விடுத்துள்ளோம்.
அப்போது கூடும் நாம் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை வந்தால் என்னசெய்யவேண்டும் என ஒத்தமுடிவாக எடுப்போம். எம்மைப்பொறுததவரை இன்றைய ஆட்சி தொடரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பா கும்.
இந்த அரசு இரண்டரை வருடங்கள் ஆடசி நடாத்தியுள்ளது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் சிலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்முயற்சிகள் இலகுவானதாகவிருக்கவில்லை. ஆனால் அம்முயற்சிகள் தொடரப்படுகின்றன. தொடரப்பட்ட வேளையில்தான் உள்ளுராடசித் தேர்தல் வந்தது.
இந்த அரசாங்கம் தொடரவேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும். ஆனால. எதிர்காலத்தில் என்ன நடைபெறும என்பதை எம்மால் திட்டவட்டமாக கூறமுடியாது. ஆனால் அரசியல் தீர்வு முயற்சிகள் தொடரவேண்டும். தொடர்வதன்மூலம் நாட்டில் ஒரு அரசியல் சாசனம் கொண்டுவரப்பட வேண்டும்.
அது பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வரவேண்டும்.
தீர்வைப்பெறும் விடயங்களில் தமிழ் மக்கள் கூடுதலான ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதே உண்மை நியாயமான தீர்வு கொண்டு வரப்படவேண்டும் என்பதில் நாம் ஆர்வமாகவும் கவனமாகவும் இருக்கிறோம்.
தேசியப்பிரச்சனை தீர்த்து வைக்கப்படவேண்டும். தீர்த்து வைக்கப்படாமல் நாட்டிலுள்ள எப்பிரச்சனைக்கும் நல்ல முடிவு காணமுடியாது. ரணிலின் அரசாங்கமாவிருக்கலாம் ஜனாதிபதியின் ஆடசியாக இருக்கலாம் இல்லை மஹிந்த ஆடசியாக விருக்கலாம் இதுதான் உண்மை நிலை. தீர்கப்படாத நிலையில் எந்த அரசும் நிலைத்திருக்குமுடியாது.
இந்த அரசின் மீது தமிழ் மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படுவதற்கு பல காரணங்களுண்டு. இருந்த போதிலும் ஒரு கட்சியென்ற வகையில் நாம் எதையும் தூக்கி எறிந்துவிடமுடியாது. எமது நோக்கங்களையும் கருமங்களையும் முன்னெடுத்துச் செல்ல பல வழிகளையும் தந்திரோபாயங்களையும் கையாண்டு முடிவைக்காண நாம் தொடாந்து ,ஈடுபடவேண்டும்.
எமது முயற்சி தோல்வி அடையும் வெற்றிபெறும என்ற முடிவுக்கு நாம் இப்பொழுது வரமுடியாது. தமிழ் மக்கள் தீவிரமாகவும் பக்குவமாகவும் நேர்மையாகவும் செயற்பட்டார்கள் என்ற உயர்ந்த அபிப்பிராயத்தை சர்வதேச சமூகம் எடுக்கவேண்டும்.
தமிழர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தையும் வாய்ப்பபையும் கெடுத்துவிட்டார்கள் என்ற முடிவுக்கு சாவதேசம் வர நாம் இடமளிகக்கூடாது. வெற்றி காண்பதற்குரிய அத்தனை முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம்.
நடந்து முடிந்த உள்ளுராடசி மன்ற தேர்தல் முடிவுகள் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போதும் பொது தேர்தலின்போதும் மக்கள் வழங்கிய ஆணையை எந்த விதத்திலும் பாதிக்கவுமில்லை நீக்கவுமில்லை.
மக்கள் இன்றைய அரசுக்கு வழங்கிய ஆணை தொடருகிறது. 2015 ஆம் ஆண்டு மஹிந்தராஜபக்ஷமீண்டும் ஜனாதிபதியாக வர தீவிர முயற்சி எடுத்தார். அதில் அவர் தோல்வி கண்டார்.
உள்ளுராடசி தேர்தல் முடிவுகளானது அரசாங்கத்தின்மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியே தவிர மஹிந்த ராஜபக்ஷவின் மீது கொண்ட பிரயத்தனலல்ல. மஹிந்தவின் எந்த செயலுக்காகவும் உள்ளுராடசி தேர்தலில் மக்கள் அவரு க்கு வாக்களிக்கவில்லை.