Breaking News

ரஷ்யாவில் தீ விபத்து : 37 பேர் பலி, பலரைக்காணவில்லை.!

ரஷ்யாவின் கெமெரோவோ நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற தீ விபத்தில் 37 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. 

இதேவேளை, குறித்த தீ விபத்தில் சிக்கி சுமார் 64 பேர் காணாமல் போயு ள்ளதாகவும் அவற்றுள் 41 சிறுவர்கள் அடங்குவதாகவும் சர்வதேச செய்தி கள் மேலும் தெரிவிக்கின்றன. 

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவி லிருந்து சுமார் 3600 கிலோமீற்றர் தொலைவில் சைபீரியா மாகாணத்தில் கெமெரோவோ நகரம் அமைந்துள்ளது. அங்குள்ள பிரமாண்டமான பல்பொருள் அங்காடியொன்றில் நேற்று ஞாயிற்று க்கிழமை ஆகையால் பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். 

பொருட் கொள்வனவிற்காக வந்தோர், திரையரங்குகளிற்கு வந்தோர் என மக்கள் திரண்டிருந்தனர். அப்போது, குறித்த கட்டிடத்தில் திடீரென தீ பரவி யுள்ளது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். தீயில் இருந்து தப்பிக்க சிலர் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர். 

இந்நிலையில் தீ பரவிய தகவல் அறிந்ததும், சுமார் 288 மீட்புப் படை வீரர்கள் அங்கு குவிந்தனர். 62 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இருப்பினும் தீயில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 41 சிறுவர்கள் உட்பட 64 பேரைக் காணவில்லையெனவும் செய்திகள் தெரி விக்கின்றன. சுமார் 1500 சதுர அடி அளவுக்கு தீ பரவியுள்ளதால் குறித்த பகுதி புகை மூட்டமாக காட்சியளித்தது.