நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்னவுக்கு விளக்கமறியல்.!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறு ப்பினர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறிய லில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டி ருந்த இவர் இன்று செவ்வாய்க்கி ழமை மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இவருக்கான விளக்க மறியல் உத்தரவைப் பிறப்பித்து ள்ளது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கௌனி பிரதேச சபைக்காக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு நாடா ளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மீது காணப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இரவு கிரிபத்கொடை விஹாரமகாதேவி மகளிர் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிக ழ்வொன்றில் வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளாா்.
தாக்குதலுக்கு இலக்கான வேட்பாளர் தொடர்ந்தும் கிரிபத்கொடை வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவி த்துள்ளனா்.
இந்த நிலையிலேயே கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.