Breaking News

அமைச்சரவை மறு சீரமைப்பு தாமதமாகலாம் - எஸ்.பி. திஸாநாயக்க.! (காணொளி)

ஸ்ரீலங்காவின் மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்புப் பணிகள் தொடர்ந்தும் தாமதமாகலாம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஆளும் கட்சிகளுக்கிடையில் இன்ன மும் கருத்தொருமைப்பாடு ஏற்படா ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டு ள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் முக்கியஸ்தரான அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க தெரிவித்து ள்ளார். 

ஸ்ரீலங்காவில் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியை பெற்று 223 உள்ளுராட்சி சபை களில் ஆட்சியை கைப்பற்றியது.

இதனால் படுதோல்வியை சந்தித்த ஆளும் தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்து தேசிய அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இதனையடுத்து பல சுற்றுப் பேச்சுக்களின் பின்னர் தேசிய அரசாங்கத்தை நீடிப்பது என இணக்கம் கண்ட இரு தரப்பினரும் அமைச்சரவையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த இணங்கினர். இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களில் ஒரு பகுதியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் இரண்டு வார ங்களில் பதவியேற்பார்கள் என அந்தக் கட்சியினரும் ஜனாதிபதி செயலக மும்அ றிவித்திருந்தது.

எனினும் அறிவிக்கப்பட்டதற்கு அமைய இந்த அமைச்சரவை மாற்றம் இப்போதைக்கு இடம்பெறாது என்று தெரிவித்தி ருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் சில வாரங்கள் செல்லும் என்றும் கூறியுள்ளார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளி டையே இன்னமும் இணக்கம் காணப்படாமையே இதற்கு காரணம் எனத் தெரி வித்துள்ளாா்.