Breaking News

காணாமல் போனோரின் அலுவலர் நியமனத்திற்கு எதிராக எதிர்ப்பு - மகிந்த (காணொளி)

சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்த ங்களை அடுத்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி யினால் மேற்கொள்ளப்பட்ட காணா மல் போனோர் அலுவலகத்திற்கான ஆணையாளர்களின் நியமனத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவும் அவரது அரசியல் சகாக்க ளும் பெரும் எதிர்ப்பை தெரிவித்து ள்ளனா். 

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கான ஆணையாள ர்கள் நியமனம் நாட்டையும் நாட்டின் விடுதலைக்காக உயிரை துச்சமாக மதித்து செயற்பட்ட படையினரையும் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாக அமைந்து ள்ளதாக  குற்றம் சுமத்தியுள்ளனா். 

ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்காக முன்னி ன்று செயற்பட்டவர்கள் என சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களை இழைத்துள்ளதாக அவர்கள் வெளிப்படையாக தெரிவித்ததாக தெரிவித்துள்ளாா்கள். 

இந்த அலுவலகத்திற்கான ஆணையாளர்களின் நியமன நடவடிக்கை முற்று முழுதாக நாட்டின் இராணுவத்தை காட்டிக் கொடுப்பதாக அமைந்துள்ளதாக மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். 

இராணுவத்தினர் காணாமல் ஆக்கிய சம்பவங்களை மேற்கொண்டார்கள் என்ற பொய்யை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆணையாளர்களின் நிய மனம் அமைந்துள்ளதாக மஹிந்த ஆதரவு தரப்பிலுள்ள விமல் வீரவன்ச தெரிவித்துள்ளாா். 

ஸ்ரீலங்கா இராணுவத்திற்காக முன்னின்று செயற்பட்ட எந்தவொருவரும் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் உள்ளடங்கி இருக்கவில்லை என உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் பிரிவினை வாதிகளுக்கு ள்ள இராணுவத்தினர் மீதான இரத்த வெறியை தணிப்பதற்காகவே இந்த அலு வலகத்திற்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ள்ளாா்.