எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை - உயிரை மாய்த்த மாணவி!
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சோ்ந்த மாணவி ஒருவா் எதிா்பாா் த்த சித்தி கிடைக்கவில்லையென தற்கொலை செய்துள்ளாா்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புது க்குடியிருப்பு கைவேலி பகுதியில் இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்து அம்மம்மாவுடன் வசி த்து வந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி எதிர்பாா்ப்புடன் கல்வி கற்று பரீட்சை எழுதியபோதும் நேற்று வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் தான் எதிர்பாா்த்த பெறுபேறு கிடைக்கவில்லையென இன்று (29-03-2018) காலை கிணற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துள்ளாா்.
முல்லைத்தீவு வள்ளிபுனம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்று பரீட்சை எழுதிய கைவேலி மருதமடு குழ வீதியை சேர்ந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.
இந்த நிலையில் இச் சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது.
மாணவா்களின் வாழ்க்கையை தீா்மானிப்பது கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை இல்லை என்பதை ஒவ்வொரு மாணவா்களும் புரிந்து கொண்டு செயற்படவேண்டும்.
இவ் விடயத்தில் பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்கள் அதிக கவனத்துடன் செயற்படவேண்டுமென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.