Breaking News

யாழ் மாநகர சபையின் புதிய மேயராக இம்மனுவேல் ஆனோலட் நியமனம்.!

யாழ் மாநகர சபைக்கான புதிய மேயராக இம்மனுவேல் ஆனோலட் தெரி வாகியுள்ளாா். 

யாழ் மாநகர சபைக்கான புதிய மேயரை தெரிவு செய்வதற்கான இரக சிய வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட் கிழமை ஆரம்பமாகியுள்ளது. 

இதன்போது புதிய மேயர் தெரிவு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில் மேயர் வேட்பாளராக மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இம்மனுவேல் ஆனோலட், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் வி. மணிவண்ணன் மற்றும் ஈ.பி.டி.பி. சார்பில் ரெமிடியஸ் ஆகியோர் மேயர் வேட்பாளராக போட்டியிட்டுள்ளனா். 

இதனையடுத்து புதிய மேயரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்த ப்படவுள்ளதாக வடமாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் அறிவித்திருந்தார். இந்நிலையில் 25 ற்கும் அதிகமான உறுப்பினர்கள் மேயர் தெரிவிற்காக வாக்கெடுப்பை இரகசிய வாக்கெடுப்பாக நடத்துமாறு கோரி க்கை விடுத்துள்ளனா்.  

45 உறுப்பினர்களில் யாழ் மாநகர சபைக்கு தெரிவான சுதர்சிங் விஜயகாந் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். அவர் சபைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் 44 உறுப்பினர்கள் இந்த இரகசிய வாக்கெடுப்பில் பங்கே ற்றுள்ளனா். 

இரகசிய வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் இம்மனுவேல் ஆனோ லட்டிற்கு 18 வாக்குகளும், வி மணிவண்ணனுக்கு 13 வாக்குகளும், ரெமிடிய ஸிற்கு 13 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. 

எனினும் வி மணிவண்ணன் மற்றும் ரெமிடியஸ் ஆகியோர் தலா 13 வாக்கு களை பெற்ற நிலையில், அவர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்காக இவ ரின் பெயர்கள் குலுக்கலுக்கு விடப்பட்டது. அதில் வி மணிவண்ணனின் பெயர் நீக்கப்பட்ட நிலையில் இம்மனுவேல் ஆனோலட்டிற்கும், ரெமிடியஸிற்கும் இடையில் மீண்டும் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.